0 of 25 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
ராணி 100 வாழைப்பழங்களை ₹ 320 க்கு வாங்கினாள், அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், அதன் இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.
Rani bought 100 bananas at the rate of ₹.320 and sold at the rate of ₹.60 per dozen. Find the profit or loss percentage
a + b ன் கூட்டல் எதிர்மறை a + b எனில் α ன் கூட்டல் எதிர்மறை என்ன?
If additive inverse of a + b is a + b. Then what is the additive inverse of a?
BDF, CFI, DHL, ……. என்ற தொடரில் அடுத்த உறுப்பு யாது?
What will be the next term in BDF, CFI, DHL, ……. ?
இரு சிகப்பு மற்றும் இரு நீல கட்டங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கட்டங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினால் எத்தனை வித கோபுரங்கள் அமைக்கலாம்?
How many different towers of 4 blocks can be built using 2 red and 2 blue blocks kept one over the other?
நிரப்புக:
5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ———- நாட்களில் செய்து முடிப்பர்
Fill in the blank: If 5 persons can do 5 jobs in 5 days then 50 persons can do 50 jobs in ———- days
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் அடிப்பக்கத்தை காண்க.
The base of the parallelogram is thrice its height, if the area is 192 sq cm, find the base.
10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ₹.4,400 ஆனது ₹.4,851 ஆக ———- ஆகும்.
The time taken for ₹.4,400 to become ₹.4,850 at 10 % compounded half yearly is
சதீஸ் குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் ரூ. 52,000 தனி வட்டி முறையில் கடன் வாங்கி, 4 ஆண்டுகள் கழித்து ரூ.79,040 திரும்பி கடனைச் செலுத்தினால் அவர் வாங்கிய கடனுக்குரிய வட்டி வீதம் எவ்வளவு?
Sathish Kumar borrowed ₹.52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years he paid ₹.79040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹.750 மற்றும் ₹.900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளில் விலையை விகிதத்தில் கூறுக:
Ramu and Somu bought two tables for ₹750 and ₹.900 respectively. What is the ratio of the prices of tables bought by Somu and Ramu?
1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க:
Find the smallest number which is exactly divisible by all the numbers from 1 to 9
ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க:
When a number is decreased by 25% it becomes 120. Find the number
ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சதவீதம் காண்க:
In a school of 1,400 student, there are 420 girls. Find the percentage of boys In the school?
20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை ₹.96 எனில் அதன் அசல் விலை என்ன?
If the price of orid dhall after 20% increase is ₹.96 per kg, find the original price of orid dhall per kg.
₹.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்
Find the C.I on ₹.15625 at 8% p.a. for 3 years compounded annually
1+4+16… என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
How many terms of the series 1+4+16+…. make the sum 1365?
கீழே எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க
L I N C P E
1 2 3 4 5 6
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaningful word. Find out the code for the word so formed from the answers given
L I N C P E
1 2 3 4 5 6
சரியா? தவறா? கூறுக என 5 கேள்விகள் இருக்கின்றன. இந்த 5 கேள்விகளுக்கும் மொத்தமாக எத்தனை விதமான பதில்கள் தரமுடியும்?
How many ways can you answer five TRUE or FALSE Questions?
210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை.
210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the same job in 20 days working 14 hours a day?
ஒரு கோள வடிவ பலூனில் காற்று உந்தப்படும் போது அதன் ஆரம் 12 செ.மீ-லிருந்து 16 செ.மீ ஆக உயருகிறது. இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க:
The radius of a spherical balloon increases from 12 cm to 16 cm as air being pumped it. Find the ratio of the surface area of the balloons in the two cases.
அசல் ₹.4,000 க்கு ஆண்டு வட்டி வீதம் r = 5% ல் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
Find the compound interest for the principal ₹.4,000 at rate of interest 5% p.a. for 2 years, interest compounded annually.
ரூ. 5,600 க்கு 6% வட்டி வீதம் எத்தனை ஆண்டுகளில் ரூ.6,720 கிடைக்கும்?
In what time will ₹.5,600 amount to ₹.6,720 at 6% per annum?
A,B,C,D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் Dஐ விட 1000 அதிகம் பெறுகிறார். எனில் B ன் பங்கு என்ன?
A sum of money is to be distributed among A,B,C,D in the proportion of 5:2:4:3. If C gets ₹.1,000 more than D.What is B’s share?
ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கி. தாமிரத்தைப் பெற தேவையான உலோகக் கலவையின் அளவு
An alloy contains 26% of copper. What quantity of alloy is required to get 260 g of copper?
35 a2c3b, 42 a3cb2 மற்றும் 30 ac2b3 இவற்றின் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க:
LCM of 35 a2c3b, 42a3cb2 and 30 ac2b3
(x+y)2, (y+z)3, (z+x)4 ன் மீ.பொ.வ
H.C.F. of (x+y)2, (y+z)3, (z+x)4 is
Notice: Trying to get property 'roles' of non-object in /home/courses.winmeen.com/public_html/wp-content/plugins/sfwd-lms/themes/ld30/templates/focus/comments_list.php on line 37
Super